Sunday, April 26, 2009

தாய் சி - பயன்கள்










தாய்
சி பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் ஆழ்ந்த உறக்கம் அளிக்கும்

முதுமை நெருங்குவதால் மற்றும் உழைப்பில்லாததால் ஏற்படும் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி படிப்படியாக குறையும்

Sunday, April 19, 2009

தாய் சி - பயன்கள்









தாய்
சி பயிற்சியை தொடர்ந்து பயிலும் போது இயற்கையான உடல் அசைவுகளினால் மன அழுத்தம் குறையும்,
இப்பயிற்சி நமது உடல் சக்தியை கூட்டுகிறது
நோய் எதிர்ப்பு சக்தி உடலில் கூடுகிறது

Thursday, April 16, 2009

தாய்-சி எளிமை




தாய் சி பயிற்சி மிக எளிதான பயிற்சியாகும் . நாம் வெளியூர் சென்றாலும் நமக்கு கிடைத்த சிறிய அறையிலேயே பயிற்சி செய்யலாம் .

பயிற்சி செய்ய வயது வரம்பு இல்லை. பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற பயிற்சி

Saturday, April 11, 2009

தாய் சி- சலிப்பை தராது


தாய் சி பயிற்சி தொடக்கம் முதல் பயிற்சி இறுதி வரை எளிமையானது . இலகுவானது . உடலை வருத்தி பயிற்சி செய்ய வேண்டியதில்லை . தாய் சி என்பது ஒரு புதிய மொழியை கற்று கொள்ளும் அனுபவம் போன்றது . பயிற்சி சலிப்பை தராது

Thursday, April 9, 2009

தாய்-சி - இயக்கம்


இப்பயிற்சியின் போது நமது உடலை இயல்பாக அதன் போக்கில் இயக்க வேண்டும் நமது உடலை வருத்தி பயிற்சி செய்ய வேண்டியதில்லை நாளடைவில் நமது உடல் மிக சரியான கோணங்களில் தானாக இயங்கும் .

Wednesday, April 8, 2009

தாய்-சி - தியானம்





தியானம் என்பது ஒரு அனுபவம். அதை விளக்க வார்த்தை இது வரை இல்லை. தாய் சி பயிற்சி தியானம் கலந்த உடல் அசைவுகளால் ஆனது. பயிற்சியின் முழுவதும்
கண்கள் கையை மட்டுமே பார்ப்பதால் கவனம் வேறு எங்கும் செல்லாமல் தியான நிலை வரும்

Tuesday, April 7, 2009

தாய் சி - ஒரு கலையா?



உலகில் உள்ள அனைத்து சமூகத்திற்கும் நுண்கலை என்பது உண்டு . அது கலை என்பதோடு அல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் . தற்போது பெரும்பாலான கலைகள் பல காரணங்களால் அழிந்தோ அல்லது நுணுக்கம் குறைந்தோ போய் விட்டது . ஆனால் தாய் சி என்ற பழமைவாய்ந்த சீன உடற்பயிற்சி கலை இன்னும் அதே தன்மையோடு உள்ளது

தாய் சி ரகசியம்


தாய் சி கலை நம் கைவசமாவது மிக எளிது. அதற்குறிய எளிமையான 3 அம்சங்கள்.

1. பயிற்சி

2. தினமும் பயிற்சி

3. தினம் தினம் பயிற்சி

எந்த ஒரு கலையையம் நம் கைவசப்படுத்துவது சுலபம். அது மீண்டும் மீண்டும் பயிற்சி எசய்தால் மட்டுமெ

Sunday, April 5, 2009

தாய் -சி ஒரு புதையல்


தாய் -சி பயிற்சி தினமும் செய்தால் கிடைப்பது பெரும் புதையல் . இப்பயிற்சி நாள்தோறும் செய்பவர்கள் பெறும் அனுபவம் வார்த்தையில் இல்லை .