Tuesday, October 3, 2017

அன்பின் நண்பர்களே..
வணக்கம்.
 நான் தாய்ச்சி என்னும் தற்காப்பு கலையை செய்யும் படம்  போட்டால், அது பற்றி பேசினால் ம் நீங்கள் தாய்ச்சியை propagate செய்கிறீற்களா, அதன் விளம்பர தாரரா என்றெல்லாம் கேட்கிறார்கள், சிலர் நக்கலுடன் , சிலர் சீரியஸாக, சிலர் அப்பாவியாக..ஆம் அப்படித்தான், தாய்ச்சி செய்வதை படம் போட்டு விளம்பரம்தான் செய்கிறேன். ஏன் ? நான் அனுபவித்த ஒன்றை, அதன் நல்ல பலனை, நல்ல விஷயத்தை, அடைந்த பயனை மற்றவர்களுக்கு சொல்வதில் என்ன  தவறு.
எல்லோரும் உடல் நலத்துடன் இருக்கவேணும் என்ற எண்ணத்தில் சொல்கிறேன் நட்புகளே.

    எல்லோருக்கும் ஓர் உண்மையை சொல்லிக்கொள்ளுகிறேன். ஒருக்கால் நான் தாய்ச்சி செய்யாமல் இருந்திருந்தால், சிலசமயம் நான் உயிரோடு இருந்திருக்கலாமோ என்னவோ. ஆனால் இப்பவளவு ஆரோக்கியமாக, புற்றுநோயக்கு முன்பு இருந்ததைவிட இன்னும் பலமாக இருக்கிறேன் என்றால், ஒரு மாதத்தில் சுமார் 13, 500 கி.மீ கூட அலுப்பின்றி , 18 மாவட்டங்கள் சென்னை தவிர அனைத்து இடங்களுக்கும் பேரூந்திலேயே , அதுவம் அரசுப் பெருந்தில்தான் பணிக்கிறேன் என்றால் அது நிச்சயமாய் தாய்ச்சி தந்த கொடைதான். அதுவே உடலையும், மனதையும் முன்பை விட இரும்பாககி உடல்நலத்தை அதிகரித்து உள்ளது.

  தாய்ச்சியின் போது  உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் செயல்பட்டு உடற்பயிற்சி செய்கிறது. ஒரு செல் கூட ஓய்வெடுப்பதில்லை. அது செய்யும்போது செய்யபப்டும் concentration ,மனதின் ஒருமுகத்தன்மை, யோகாவில் கூட ஏற்படாது. ஏனெனில் தாய்ச்சி செய்யும்போது, உங்களின் கவனம் சிதறுண்டால் , அடுத்த நிலை செயலப்பாட்டுக்கு செல்லமுடியாது. அதில் உள்ள '28 form  "என்ற முறையில், 8 நிமிடத்தில், 28 வகையாக அசைவுகளை உடல் செய்யவேண்டும். மனம் எங்கோ போய் உலாவ சென்றுவிட்டால், எப்படி அடுத்த stage /நிலை செல்வது. அதனை விட்டுவிடுவோம்.அல்லது தடுமாறிவிடுவோம்.

 8 form ல், 2 நிமிடத்தில், 8 அசைவுகள்./ செயல்பாடுகள் . 85 form ல், 21 நிமிடத்தில், 85 அசைவிலும், அவற்றின் செயல்பாடுகளும். பேன்டை கழட்டிவிடும். இது செய்யும்போது உடல் வியர்க்கும், ஆனால் இதயத்துடிப்பு அதிகரிப்பதில்லை. முக்கியமாக, வயதாவதினால் ஏற்படும் முதுமையால், மூட்டு எலும்புகள் தேய்மானமாகி, இறுகி ,கால்களை மடக்க முடியாமல், வலி ஏற்படும். தாய்ச்சி செய்ப்பவர்களுக்கு,எலும்பு தேய்மானம் ஏற்படாது. ஏனெனில், எலும்புகள்  தொடர்ந்து அசைந்து கொண்டு இருப்பதால், தேய்மானம் ஏற்படாது, வலியும் உருவாகாது.

   தாய்ச்சி செய்யும்போது அதிக கவனத்துடன் செய்வதால், நினைவாற்றலும் அதிகரிக்கிறது. முதுமைக்கான எந்த மாற்றத்தையும், துன்பத்தையும் உடல் சந்திக்காது. அப்படியே ரப்பர் போல உடல் வளையும்.மிகை அழுத்தம் குறைகிறது. பக்கவாதக்காரர்கள் மற்றவர்கள் துணையின்றி நடக்க முடிகிறது. இங்கு நான் தாய்ச்சிக்கு வந்த பின்னர் 20 வயது வாலிபர், நடக்க்கவே முடியாமல், அடுத்தவர் துணையுடன் ,தொப்பம்பட்டியிலிருந்து பக்கவாதம் ஏற்பட்டு  வந்தார்.தாய்ச்சி செய்ய வந்தார்/ வந்த ஒரு மாதத்தில் தானாகவே நடந்தார். எனக்குத் தெரிந்து பழனியில் பக்க வாதம் ஏற்பட்டு இங்கு வந்த 4 பேர் நன்கு குணமாகி,இப்போது திரும்பியே பார்ப்பதில்லை.

    தாய்ச்சியென்னும் சீன  தற்காப்பு கலையில் ஒரு பாடத்திட்டம்,அதில் செய்முறைத் தேர்வு என்பதெல்லாம் தெரியாமல், உயிர் காக்க, அதைவிட, வலி நிறைந்த நேரத்தை மறக்க,  தாய்ச்சி செய்ப்பவர்களை வேடிக்கை, புதிய நண்பர்களை  ,  பார்க்கவே தாய்ச்சி செய்யுமிடம்  அங்கு போனேன். பின் மெதுவாக செய்தேன் அப்போதெல்லாம் என்னால் நடக்க கூட முடியாது. கீழே விழுந்தால்,எலும்பை கூடையில்தான் அள்ளணும் ,எனவே கவனமாக இருங்கள் என மருத்துவர் அறிவுறுத்தி இருந்தார். துவக்கத்தில் ரவி மாஸ்ட்ரும், சிவா மாஸ்டரும்,மிக மெதுவாகவே என் கையைப்பிடித்து நடத்தி சென்று ,நான் கீழே விழுந்து விடாமல் இருக்க கவனமாக கண்காணித்து தாய்ச்சி  சொல்லித்தந்தனர். ஆனால் இப்போது நீங்கள் 10 பேர் சேர்ந்த என்னை தள்ளினாலும் நான் விழமாட்டேன்.தாய்ச்சியில் எப்போதும் உடல் ஒற்றைக்காலில் நின்று பழகிவிட்டதால், மற்றவர்கள் தாக்கும்போது உடல் எப்போதும் உஷாராக இருக்க உள்ளுணர்வால் பணிக்கப்பட்டுள்ளது. என்னால் இப்போது தொடர்ந்து 5 மணி நேரம் தாய்ச்சி  செய்யமுடியும்.

ஆனால் இன்று என் நிலைமை ...? இந்தியாவில் நான்தான் தாய்ச்சியில் முதுகலைப்பட்டம் பெற்ற அதிக வயதான பெண்.! என் எண் தான், முது்கலைப்பட்டப படிப்பின் முதல் எண் . First Register in  india . இப்போ எனக்கு வயது 70 என்றால்,நீங்கள் நம்புவது கடினம்.  என்னைப் பார்த்தால்,உங்கள் மூளை எனது உருவத்துக்கு 70 வயது கொடுக்காது.
ஒரு நாளின் 20 நிமிட தாய்ச்சி தற்காப்புக்கலை, உங்கள் இறப்பை ஒவ்வொரு நாளும் குறைந்தது  ஓர் ஆண்டு  தள்ளிவைக்கிறது.

உங்களுக்கெல்லாம் ஒரு தகவல், புற்றுநோயின் போது , உடலில் உள்ள புற்று நோய் செல்களை சாகடிக்க, வேதி சிகிச்சை என்ற ஒரு சிகிச்சை தரப்பப்டும்,இது ஊசி மூல, செலுத்தப்படும் பல் மருந்துகளின் கலப்பு.இதில் மருந்து  ஏற்றுவது சுமார் 4=6 மணி நேரம் நடக்கும், ஒவ்வொரு 21 நாட்கள் இடைவெளியில். மிக மிககொடுமையான நிகழ்வுதான். அதன் பின்னர். அட்=ந்த மருந்து எந்த ஒரு புது செல்லும் உருவாமகாமல் பார்த்துக்கொள்ளும். இதனால், வாய், குரல்வளை, உணவுக்குழாய், வயிறு, குடல், மலக்குடல், குதம் எல்லாம் புண்ணாகிவிடும். உணவும் உண்ணமுடியாது. உணாவிட்டால் பரலோகம்தான்.. இதன் பக்க விளைவுகள் எலும்பு தேய்மானம், கால்சியம் வெளியீற்றம், நினைவுகள் அழிக்கப்படுதல் . இதையெல்லாம் இன்று தாய்ச்சி என்ற அற்புத தற்காப்புக்கலை என்னை நேராக்கி, வாழ்வை சீராக்கி, முன்பைவிட அதிகமாய் வாழ்க்கையில் ரன்  எடுக்க வைத்திருக்கிறது.

அது மட்டுமா., புற்றுநோயிலிருந்து மீண்டு, அதிக நாட்கள் வாழ்ந்துகொ ண்டிருப்பவர்களை ஊடகங்கள் தேடி மக்களுக்கு எப்படி புற்று நோயிருந்து தப்பிக்க என்ற ரகசியம் மக்களிடம் பேசும்போது, முக்கிய கண்ணியாக , மருந்துக்கு அடுத்து வருபவர். தாய்ச்சிதான்.

  இந்த போனஸ் வாழ்க்கையின் காரணி ,ராணி  கிரியா ஊக்கி தாய்ச்சி மட்டுமே. எனக்கு தாய்ச்சி சொல்லித்தந்த மாஸ்ட்டர்கள் ரவி & சிவாவுக்கும், தாய்ச்சிக்கு என்னை அறிமுகப்படுத்திய வினோவின் நண்பர் கோகுலுக்கும் கோடானு கோடி நன்றி சொன்னாலும் அது தீரவே தீராது. தினம் அங்கு என்னை அழைத்துச் செல்லும் சிவாஜி என்ற சிவகுமார், அவ்வப்போது மகன் ரபீக் இவர்களால் தான் நான் இன்னம் இந்த உலகில் சவடாலாக உலா வந்து கொண்டு.

நேற்று நான் ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறேன்.. அதாவது தாய்ச்சியின் அடுத்த கட்ட உயர் செயல், saber  & knife ,நேற்றிலிருந்து saber (பட்டா கத்தியுடன் )தாய்ச்சி செய்தல் துவங்கியாச்சு.துவங்கும்போது , பயிற்சியில் காயம் ஏற்பட்டு விடலாம் என்று முதலில் மரத்தால் ஆன கத்தியால்  பயிற்சி.பின்னர் பட்டாக்கத்தியுடன் பயிற்சி. நான் துவத்திலேயே நன்றாக செய்வதாகவும், விரைவில் இதனையும் கற்றுக்கொள்வேன், தொடர்ந்து 15 நாட்கள் பழனியில் இருந்தால். ஒரு 5 நாட்கள இருப்பேன். இருப்பினும் இதிலும் வெள்ளாடிடுவோம்.

யாரடா மனிதர் அங்கே?

சின்ன சின்ன சிட்டுக்குருவி
செல்ல செல்ல சிட்டுக்குருவி
ஓடி வந்து தோளின் மேலே ஏறிக்கோ
குச்சி அடுக்கிகிட்டே சொல்லும்
 பாட்டைக் கேட்டுக்கோ