Wednesday, July 20, 2011

எங்களுடன் தாய் சி பயிலும் திருமிகு மோகனா அவர்கள் Facebook ல் எழுதிய மடல்

தற்காப்பு கலையான "தாய் சி (tai chi)" என் இன்றைய வாழ்வில்..!

by Mohana Somasundram on Saturday, July 16, 2011 at 1:19am
பழனி, ஆலன் திலக் தாய் சி பயிற்சி  பள்ளியின் பயிற்சியாளர்கள்முன்னால், திருமிகு ராமன் & திருமிகு ரவி, பின் வரிசை திருமிகு சிவக் குமார் &திருமிகு.ஜவஹர்

தற்காப்பு கலையான தாய் சி.. நினைவுத்திறனுக்கும்..!


சீனாவில் தாய் சி

வணக்கம் நண்பர்களே..! நான் கடந்த இரு மாத காலமாய் "தாய் சி (thai chi)" என்ற சீன தற்காப்புக்கலையை கற்று வருகிறேன். தற்காப்புக் கலை என்றதும் ஏதோ, சண்டைக்குப் போக ஆயத்தம் பண்ணுகிறாப் போல தெரிகிறதா? என்ன உதைப்பது, குத்துவது, மோதுவது மற்றும் கட்டிப்புரள்வது என்றெல்லாம் கற்பனை ஓடுகிறதா நண்பா..! அப்படி எல்லாம் ஏதும் இல்லை. இது ஒரு மிக மிக மெதுவான, தாள லயம்/சந்தத்துடன் கூடிய ஒரு தியான உடல் அசைவுகள்தான். இதன் மூலம் மன அழுத்தம்/இறுக்கம் தளர்த்துதல், மன அமைதி,மோன நிலை, உடல் வலிமை,நினைவுத்திறன் மற்றும் கவன ஈர்ப்பு போன்ற நிகழ்வுகள் உண்டாகின்றன. இதுவே தற்காப்புக் கலையாகவும் திகழ்கின்றது.
தாய் சியின்.. விளக்க்கம்..!




"தாய் சி என்பது நம் மனத்துள் உறைந்திருக்கும், தற்காப்புக் கலை மற்றும் உடல்நல பயிற்சிகள் தொடர்பான, பழங்கால சீன தாவோ தத்துவம் (chineese thao philosophy) ஆகும். இன்று இக்கலை உலகம் முழுவதும் உள்ள பலகோடிக்கணக்கான மக்கள் உடல் ரீதியாக நல்ல தகுதி பெறவும், மனம் இறுக்கமற்று, மகிழ்வுடன் இருக்கவும், எதிராளி எப்போதும் நம்மைத் தாக்காமல் நாம் கவனமாக இருக்கவும் இந்த உடல் தற்காப்பு முறையைப் பயன்படுத்து கின்றனர்". . ... இவை சென்சாய் சந்திப் தேசாயின்(sensei Sandeep Desai ) கருத்துக்கள். இதுவே உண்மையும் ஆகும்.
தாய் சியின்... சரிதை..!



"தாய் சி சுவான் (Tai Chi Chuan)" என்பதன் பொருள் உச்சக்கட்ட இறுதி வலிமை/ஆற்றல்(Supreme ultimate force) என்பதே..! இதன் மூலம் ஒருவரால் ஆற்றலின் இரு பொருளையும்/ துருவங்களையும் சந்திக்க முடியும் என்று தெரிய வருகிறது. தாய் சியின் கதை புத்தரின் காலத்திலிருந்து துவங்குகிறது. இக்கலை கி.மு 600 க்கு முற்பட்டது. இது ஜென் (Zen) என்பதிலிருந்து அடி எடுத்து துவக்கப் பட்டிருக்கிறது... புத்தர் ஒரு தாமரை கையில் எடுத்த போது, லென்க்சியா மலையின் மேலிருந்து ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைத்தாராம். அதன் பொருள் ஜியா யே என்பவரைத் தவிர வேறு யாருக்கும் புரியவில்லையாம். அவரே,புத்தரை நோக்கி புன்னகைத்து, புத்தரின் சீடராகிறார்." என்னிடம் ஒரு செல்வம்/புதையல் உள்ளது.இது உண்மையானது. ஆனால் இது யாரின் கண்களுக்கும் தெரியாது, ஆனால் இதனை உணரமுடியும் இதன் கருவூலத்தை ஜியா யே க்கு கொடுக்கிறேன்", என்றார். அந்த செல்வம் ஒரு இதயத்திலிருந்து, இன்னொரு இதயத்திற்கு நேரடியாக பாய்கிறது. இதுதான் தலைமுறை தலைமுறையாக ஜென் என்ற சொத்தாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என சீனர்கள் சொல்லுகின்றனர்.







மேற்கத்திய முறையில் இதனை அசைவுடன் உள்ள யோகா மற்றும் ஆழ்நிலை தியானம் இரண்டும் இணைந்தது என்றே கருதுகின்றனர். நீண்ட நாட்கள் சீனர்கள் இதனை ரகசியமாகவே வைத்திருந்தனர். தாய் சி பற்றிய புத்தகமும், பயிற்சியும், 20 ம் நூற்றாண்டு வரை பொதுமக்களுக்கு எழுத்து பூர்வமான எந்தப் பதிவு கிட்டவே இல்லை. இதனை அதுவரை, தாய் சி பற்றிய தகவல்களை மாணவர்கள், தனிப்பட்ட முறையில், வாய் வழியாகவே, ஆசான்/குருவிடமிருந்து அவரின் இல்லத்தில்/ வழிபாட்டுத் தளங்களில்/கோயில்களிலிருந்து கற்றுக் கொண்டனர். இதன் முதல் புத்தகம் தாய் சி சுவான் ( The Book of Tai Chi Chuan ) என்பதே. தாய் சியின் பயிற்சி என்பதுஉடல் நலத்துக்கும் மற்றும் , நீண்ட ஆயுளுக்கும் மிகவும் கை கொடுக்கிறது.
உடலின்..கடவுச் சீட்டு .. தாய் சி..!

Sarah Samson Sarah Samson, 103, a Fort Washington rsident, is part of Albert Einstein's Longevity Genes Project, which explores why people can live for so long and whether there can be a successful drug that mimics their genes for others. Bill Greiner conducts his research on Samson through a series of questionnaires and tests. Original Filename: CHU_AGE09.JPG103வயதிலும் தாய் சி செய்து, தாய்சி மூதாட்டி என்று புகழ் பெற்றவர்.
தாய் சியின் குறியீடு
உடல் வாத பாதிப்பில் உள்ளோர்க்கும் தாய் சியின் பலன்

ஒரு நாளில் வெறும் 15 நிமிட தாய் சி செயல்பாடு என்பது உங்களின் நல்ல உடல்நலம், தகுதி, மன அமைதி, மனம், உடல் இரண்டையும் ஒருங்கிணைத்து செய்யும் அற்புத திறமை போன்றவற்றை உருவாக்கி, தங்களின் நீண்ட வாழ்நாளுக்கு வழிகாட்டும் கடவுச் சீட்டுதான் தாய் சி. தொடர்ந்து தாய் சி பயிற்சியை செய்பவர்களுக்கு , அவர்களின் உடல் நலம் அதிகரிக்கிறது. தாய் சி யின் பலன் என்பது எண்ணற்றது.உடலுக்கு நோய் வராமலும் தடுப்பதாக கருதப் படுகிறது.
இதன் மூலம் கீழே குறிப்பிடும் நோய்களை கட்டுப்படுத்துகிறது என்ற தகவல் ஆராய்ச்சி வழியே நிரூபிக்கப் பட்டுள்ளது.
  • மிகை இரத்த அழுத்தம்
  • மனவழுத்தம்/இறுக்கம்
  • இதயப் பிரச்சினைகள்
  • தசை செயல்பாடு
  • நிற்கும் நிலை
  • சுவாசம்
  • உடல் சமன் நிலை
  • மேலும் இதன் மூலம் சர்க்கரை நோய், ஆஸ்துமா, பார்கின்ஸ் வியாதி,அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு போன்றவையும் ஓர் ஒழுங்க்குக்குள் வருகின்றன.
இதயத்தை, உயிரைக்காக்கும். தாய் சி..!
பழனியில் தாய் சி வகுப்பு



தாய் சி செய்வதனால்,ஒருவருக்கு கீல் வாதம், இதய அடைப்பு போன்றவைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. பக்க வாதம் வந்தவர்கள் தாய் சி செய்வதன் மூலம், உடல் செயல்பாடு சாதாரண நிலைக்கு வந்ததை கண்கூடாகப் பார்த்து அறிந்தேன். எனக்குவேதி சிகிச்சையால் எலும்பிலிருந்து கால்சியம் கரைந்து போயிருந்தது. மருத்துவர் இன்னும் 4 மாதத்திற்கு மேல் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனெனில், எலும்பின் கால்சியம் அதிகமாய் கரைந்திருப்பதால், கீழே விழுந்துவிட்டால், நிச்சயம் எலும்பு முறிவு ஏற்படும் என்றார். அப்படியும், காலில் சுண்டு விரலுக்கு அடுத்த விரலை ஒடித்துக் கொண்டு 2 மாதம் ஆகிறது. சரி யாக இன்னும் 3 மாதம் ஆகும் என்கிறார் மருத்துவர். இதுவே சாதாரண நபர் என்றால் அதிக பட்சம் ஒரு மாதத்தில் சரியாகி விடும்.
எனது உடலை.. உறுதியாக்கிய.. தாய் சி..!



பழனி தாய் சியில்.. முன் வரிசையில்,பயிற்றுநர்.. திருமிகு ராமன்,பின் வரிசை: திருமிகு சுரேஷ் & திருமிகு மோகனா

நான் கடந்த 2 மாதமாய் தாய் சி செய்வதன் பலனை முழுமையாய் அறிய முடிகிறது.முன்பெல்லாம் ஒருவரின் துணையின்றி ஒரு படிக்கட்டில் ஏறி, இறங்க முடியாது.. பயணம் செய்வது அயர்ச்சியை உண்டாக்கும். இப்போது நான் தாய் சி செய்வதால், எலும்பு உறுதியாகி வருவதை உணர முடிகிறது.அது மட்டுமல்ல, தாய் சி செய்ய போதுமான கவன ஈர்ப்பும் (concentration), நினைவுத் திறனும்(memory) வேண்டும். அது இன்றி தாய் சி செய்ய முடியாது. எனக்கு இவை அதிகரிப்பதை காண்கிறேன்.கடந்த இரு மாதங்களில் என் உடல் நலத்தில் அதிவேக முன்னேற்றத்தை உணர்கிறேன்.உடல் பலமாக மாறி இருக்கிறது. மற்ற பலன்களை போகப் போக அறிய/உணர முடியும்.அறுவை சிகிச்சை மருத்துவர் எனது இடது கையை 60 % மட்டுமே செயல் படுத்த முடியும் எனது கையில் சில தசைகளை வேட்டிவிட்டதால் என்றார். இப்போது எனது இடக் கை 100 % வலது கை போலவே செயல்படுகிறது.. இக்கலையின் மூலம் உடலின் அனைத்து தசைகளும் செயல்படுகின்றன . ஒருவர் இதனை செய்து பார்த்துதான் அதன் பலன்களை உணர முடியும் . அதனை சொல்லல் வெளிப்படுத்த இயலாது. தாய் சி ஒரு நாள் செய்யாவிட்டாலும், அன்றைய தினம் சுறு சுறுப்பாய் இருக்காது.
இந்தியாவில்.. தாய் சி..மையம்..!
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை &பண்பாட்டுக் கல்லூரியில் தாய் சி வகுப்பு

பழனியின் பயிற்சி ஆசிரியர் திருமிகு ராமன் அவர்கள்
பயிற்சியாளர் திருமிகு. ரவி

தாய் சி பயிற்சி இந்தியாவில் குறைந்த இடங்களில் மட்டுமே நடத்தப்படுவதாய் தெரிகிறது. முக்கியமாக் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் மதுரையில்உள்ளது.இதில் தமிழ் நாட்டில் தாய் சி சொல்லிக் கொடுக்கும் பங்கை சிறு நகரான பழனியும் செய்கிறது.இந்த தாய் சி பள்ளியின் பெயர் ஆலன் திலக் கராத்தே & தாய் சி பள்ளி. மற்ற இடங்களில் வாரத்தில் இரு நாட்கள் மட்டும்தான் பயிற்சி. பயிற்சி கட்டணம் டெல்லியில் ரூ. 10 ,௦00/=. மற்ற இடங்களில் 3,௦௦௦ த்துக்கு மேல். ஆனால் பழனியில் கட்டணமும் குறைவு, சொல்லித்தரும் நாட்களும் அதிகம். ஆம் வாரத்தின் 7 நாட்களும் தாய் சி பயிற்சி தரப்படுகிறது.கட்டணம் ரூ 250 /= மட்டுமே. இந்த பயிற்சி வகுப்பு தினமும் சந்தான கிருஷ்ணா திரையரங்க வளாகத்தில்,காலை 6 .30 - 8 . 00மணி வரை நடக்கிறது. இப்பள்ளியில் பயிற்சி தரும் திருமிகு ராமன் என்ற, பயிற்சி ஆசிரியர் வாரம் இருமுறை விடுமுறை நாட்களில் மதுரையிலிருந்து வந்து பயிற்றுவிக்கிறார். மற்ற நாட்களில் பழனியிலே உள்ள திருமிகு. ரவி மற்றும் திருமிகு. சிவகுமார் இருவரும் தாய் சி பயிலும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். இங்கு 20 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் தாய் சி பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். இங்கு தாய் சி பயிற்சி பெரும் ஒரே பெண் திருமிகு மோகனா மட்டுமே. சீனாவில் 100வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் தாய் சி யை அனாயாசமாகச் செய்கின்றனர். இது செய்வதன் மூலம் எனது வாழ் நாள் இன்னும் 20 ஆண்டுகள் அதிகரிக்கும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment

TAI CHI